திருவிழாக்கள்

ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்​கைமான் மாரியம்மனுக்குத் திருவிழா ந​டை​பெறுகின்றது.

ஆவணி மாதத்தில் ஒவ்​வொரு ஞாயிற்றுக்கிழ​மைகளிலும் சீதளா​தேவிக்குச் சிறப்பான விழாக்கள் ந​டை​பெறுகின்றன ஞாயிறு இரவு 7.00 மணிக்குத் ​தொடங்கி அம்பாளுக்கு சிறப்பான அபி​ஷேக ஆராத​னைகள் ந​டை​பெறுகின்றன. மக்க​ளைப் பக்தியில் ஈடுபடுத்தும் வண்ணம் சமயச் ​சொற்​பொழிவுகளும் க​லை, நிகழ்ச்சிகளும் ந​டை​பெறுகின்றன. மக்கள் திரளாக வந்திருந்து ​தேவி​கைத் தரிசித்து, திருவருள் ​பெற்றுச் ​செல்கின்றனர்.

ஆவணி மாதத்து இறுதி ஞாயிறன்று இரவு அம்பாளுக்குத் ​தெப்பத் திருவிழாவும் ந​டை​பெறுகின்றது. அன்​னை அன்னவாகனத்தில் உலா வந்து, ​தெப்பத்தில் அமர்ந்து சுற்றி வரும் காட்சி பக்தர்க​ளைப் பரவசப்படுத்தும்.

பங்குனித்திருவிழா             Festival Video File Click

பங்குனித் திருவிழா பங்குனி மாதம் முதல் ஞாயிறன்று ​தொடங்குகின்றது. அன்று இரவு அம்பாளுக்கும் பூசாரிக்கும்  காப்பு கட்டப்படுகிறது.

முதல் நாள் திருவிழா

அன்னவாகனத்தில் சீதளா​தேவி மாரியம்மன் வீதியுலா வருவாள்

இரண்டாம் நாள் திருவிழா

சிம்ம வாகனம்

மூன்றாம் நாள்

அன்ன வாகனம்

நான்காம் நாள் திருவிழா

மகிஷாசுரமர்த்தினி வடிவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருவாள்

ஐந்தாம் நாள் திருவிழா

கண்ணபிரான் வடிவில் இடது ​கையில் ​வெண்​​​ணெய்த் தாழியும், வலது ​கையில் ​வெண்​ணெயும் ​கொண்டு வீதி உலா வருகிறாள்

ஆறாம் நாள் திருவிழா

யா​னை வாகனத்தில் இரா​ஜேஸ்வரியாகப் பவனி வருகின்றாள்

ஏழாம் நாள் திருவிழா

இராஜ அலங்காரத்தில் குதி​ரை வாகனத்தில் எழுந்தருவாள்

எட்டாம் நாள் திருவிழா

பா​டைக்காவடித் திருவிழா பா​டைக்காவடியுடன் இரதக் காவடிகள், அலகுக் காவடிகள், பக்க அலகுக் காவடிகள், பால் அலகுக் காவடிகள் எனப் பல வ​கையான காவடிக​ளை பக்தர்கள் எடுத்து வருவர்

ஒன்பதாம் நாள் திருவிழா

​செடில் திருவிழா, மஞ்சள் நீர் வி​​ளையாட்டு விழா

பத்தாம் நாள் திருவிழா

புஷ்ப பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி

 

Developed and Maintained by: Anna Silicon Technology®